உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்ட போலீசார் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட போலீசார் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், ஆயுதப்படை மைதா-னத்தில், தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். சேலம் டி.ஐ.ஜி., உமா பங்கேற்றார். தொடர்ந்து, ஒவ்-வொரு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மண் பானையில் தனித்தனி-யாக பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தில், எஸ்.பி., ராஜேஸ்-கண்ணன் தலைமையில், போலீஸ் அதிகாரிகள் மாட்டு வண்-டியில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்-டன. அதில், போலீசார் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது திற-மையை வெளிப்படுத்தினர்.விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், போலீஸ் உயர் அதிகாரிகள் வேட்டி, சட்டையிலும், பெண் போலீசார் சேலையிலும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பொங்-கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்-பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சியும் இடம்பெற்-றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை