உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கிட்னி திருட்டு; இரு புரோக்கர்கள் கைது

நாமக்கல் கிட்னி திருட்டு; இரு புரோக்கர்கள் கைது

நாமக்கல்; கிட்னி திருட்டு வழக்கில் தொடர்புடைய இரண்டு புரோக்கர்களை, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கவுசல்யா. இவர், தன் கிட்னியை விற்பனை செய்ததாக தெரிவித்தார். மருத்துவ குழுவினர் விசாரித்ததில், திருச்சியில் உள்ள மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது. அதற்காக மருத்துவமனை நிர்வாகம், 6 லட்சம் ரூபாய் வழங்கியதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், மேலும் பலரிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன் மற்றும் ஸ்டாலின் மோகனை போலீசார் தேடினர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கிட்னி திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு தலைவர் தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகனை, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்தனர். விசாரணை முடிவில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை