மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
11-Nov-2024
நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதனை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டியில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் நாமக்கல் வந்த முதல்வர் ஸ்டாலின், பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், நாமக்கல் நகருக்கு வந்து செல்லும் அனைத்து வெளியூர் பஸ்களும், புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சென்றன.இந்த புதிய பஸ் ஸ்டாண்டில், 51 பஸ்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 57 கடைகள், 2 ஹோட்டல்கள், பயணிகள் காத்திருப்பு பகுதி, 2, தாய்மார்கள் பாலுாட்டும் அறை, 1, டிரைவர்கள் ஓய்வு அறை, 1, நேர காப்பாளர் அறை, 1, பொருள் வைப்பு அறை, 1, துப்புரவு பிரிவு அலுவலகம், 1, மின்வாரிய அறை, 1, ஏ.டி.எம்., 2, போலீஸ் அறை, 1, பொது சேவை பிரிவு, 1, டூவீலர் பார்க்கிங், 60 கார்கள் நிறுத்தும் வசதி, குடிநீர் வசதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.நேற்று காலை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் ஆகியோர், புது பஸ் ஸ்டாண்டிற்கு வருகை தந்து, பஸ்கள் இயக்கத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
11-Nov-2024