நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிதி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்நாமக்கல், நவ. 3-'நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வரும், 5ல் சட்டசபை தொகுதி வாரியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:வரும், 2026 சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தலைமை அறிவிப்பிற்கு இணங்க, பி.எல்.ஏ.,-2 மற்றும் பூத் கமிட்டியை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் முதற்கட்டமாக, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய, 3 சட்டசபை பூத் ஏஜென்ட்கள் (பி.எல்.ஏ.,-2) உட்பட, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, தலைமை கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பி.எல்.ஏ., 2, வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கிளை பிரதிநிதிகள், கட்சியின் முன்னோடிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.இத்தொகுதி கூட்டத்தில், கட்சி தலைமையால் நியமிக்கப்பட்டுள்ள சட்டசபை தேர்தல் பார்வையாளர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வரும், 5ல், காலை, 8:30 மணிக்கு, சேந்தமங்கலம் ஐஸ்வர்யா மஹாலில் நடக்கிறது. மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி பங்கேற்கிறார்.ராசிபுரம் தொகுதியில், காலை, 11:00 மணிக்கு, ராசிபுரம் லயன்ஸ் சங்கத்தில், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசுகிறார். நாமக்கல்லில், மதியம், 12:30 மணிக்கு, நளா ஓட்டலில் நடக்கிறது. மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை செயலாளர் முனவர் ஜான் பங்கேற்று பேசுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.