நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு சங்கங்கள்வளர்ச்சி, கல்வி நிதி ரூ.12.52 லட்சம் வழங்கல்
நாமக்கல்:நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், 2020-21, 2021-22ம் ஆண்டு நிகர லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, ஒரு லட்சத்து, 56,393 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, ஒரு லட்சத்து, 4,262 ரூபாய் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 60,655 ரூபாய்க்கான காசோலையை, மேலாண் இயக்குனர் இந்திரா, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசிடம் வழங்கினார்.மேலும், ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், 2018-19, 2019-20ம் ஆண்டு நிகர லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, இரண்டு லட்சத்து, 97,123 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, ஒரு லட்சத்து, 98,081 ரூபாய் என, மொத்தம், நான்கு லட்சத்து, 95,204 ரூபாய்க்கான காசோலையை, துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசிடம் வழங்கினார்.திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கி, 2018-19, 2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24ம் ஆண்டு நிகர லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, இரண்டு லட்சத்து, 99,878 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதி, ஒரு லட்சத்து, 96,587 ரூபாய் என, மொத்தம், நான்கு லட்சத்து, 96,465 ரூபாய்க்கான காசோலையை, துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசிடம் வழங்கினார்.