உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளச்சாராயம் விற்பனை நாமக்கல் எஸ்.பி., ஆய்வு

கள்ளச்சாராயம் விற்பனை நாமக்கல் எஸ்.பி., ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், கள்-ளச்சாராயம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்குட்பட்ட பழனியப்பர் கோவில், மலை அடிவார பகுதிக-ளிலும், மங்களபுரம் பகுதியில், உரம்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி ஆகிய பகுதிகளில், ஏற்கனவே மதுவிலக்கு குற்றங்களில் ஈடு-பட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து கலந்துரையாடினார்.அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவது பற்றியும், அவர்களது மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்-கைகள் குறித்தும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து, 'கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்துவதுடன், அவற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வு அடைய வேண்டும். கள்-ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்-களுக்கு, அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்றுத்தரப்படும்' என்றார். அதையடுத்து, அனைத்து வகையான குற்றத்தடுப்பு நட-வடிக்கைகள் சம்பந்தமாக போலீசாருடன் எஸ்.பி., விமலா ஆய்வு மேற்கொண்டார். மதுவிலக்கு பிரிவு போலீசார் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை