மேலும் செய்திகள்
இளைஞர் காங்., எழுச்சி பயணம்
26-Aug-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் கலந்து கொண்டார்.அவர் கூறியதாவது: வரும், 2026 சட்டசபை தேர்தலில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என, தி.மு.க., தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்கள், மகளிர் வளர்ச்சிக்கு, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த தகவலை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் திறம்பட பணியாற்ற வேண்டும். வரும் செப்., 17-ல், தி.மு.க., சார்பில், சென்னையில் முப்பெரும் விழா நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக ஒன்றிய, நகர, பேரூர் கூட்டத்தை நடத்த வேண்டும். வரும், 12-ல் பரமத்தி-வேலுாரில், கட்டப்பட்டுள்ள கட்சியின் தொகுதி அலுவலகத்தை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதனை நம் இல்ல நிகழ்வாக கருதி அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். மூன்று தொகுதிகளிலும் இளைஞரணி சார்பில், நுாலகம் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
26-Aug-2024