மேலும் செய்திகள்
தீ தொண்டு வார விழா உறுதிமொழி ஏற்பு
20-Apr-2025
உலக மலேரியா தினம்உறுதிமொழி ஏற்பு
26-Apr-2025
திருச்செங்கோடு :மே, 16ல் தேசிய டெங்கு தினத்தையொட்டி, நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில், சேர்மன் நளினிசுரேஷ்பாபு தலைமையில் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளபட்டது. அதில், சுற்றுப்புற சுகாதாரத்தை சுத்தமாக வைத்துக்கொள்வேன். டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவேன். பழைய டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்ற பழைய பொருட்கள் சேராத வகையில், சுற்றுப்புறத்தை பார்த்துக்கொள்வேன். குடிநீர் தொட்டியைமூடி வைத்து, டெங்கு கொசு பரவாமல் பார்த்துக்கொள்வேன் என, டெங்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
20-Apr-2025
26-Apr-2025