மேலும் செய்திகள்
சூர்யா கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
07-Nov-2025
நாமக்கல், நாமக்கல் மஹேந்ரா பொறியியல் கல்லுாரியின், ஏரோநாட்டிக்கல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு இணைந்து, 'விண்வெளி தொழில்களில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடத்தின. கல்லுாரி தலைவர் பாரத் குமார் தலைமை வகித்தார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மேனாள் இயக்குனர் முனைவர் தமிழ்மணி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் இயந்திரம் மற்றும் வானியல் துறை சார்பாக கலந்துரையாடல், விவாதம், திட்ட விளக்கம், காட்சிப்படுத்துதல் ஆகியவை நடந்தன. சிறந்த திட்ட விளக்கங்கள் மற்றும் விவாத கட்டுரைகளுக்கு விருது, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கருத்தரங்கில், பிற மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், பொறியியல் மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய பொறியாளர் அமைப்பின் தேசிய தலைவர் வி.பி.சிங், பி.வி.வெங்கட கிருஷ்ணன், வி.கார்த்திகேயன், சேலம் பிரிவு தலைவர் தங்கராசு, செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், கல்லுாரி முதல்வர் ரமேஷ், புல முதல்வர்கள் சண்முகம், நிர்மலா, இந்திய பொறியாளர் சேலம் அமைப்பின் செயலாளர் தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Nov-2025