மேலும் செய்திகள்
கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
04-Oct-2024
சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலுநாமக்கல், அக். 5-செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில், சமயபுரம் மாரியம்மன் சிலை புதிதாக இடம்பெற்றுள்ளது.நவராத்திரிக்கு துர்க்கையான பார்வதியை, முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை, 3 நாட்களும், இறுதி, 3 நாட்கள் சரஸ்வதியையும், 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும். நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, 'நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே' என்று உணர்த்துவது தான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து, மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கின்றனர்.அதன்படி, நவராத்திரி விழா, நேற்று துவங்கி, வரும், 13ல் முடிகிறது. நாமக்கல், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 13ம் ஆண்டாக நவராத்திரி விழா, கொாண்டாடப்படுகிறது. விழாவில், நவராத்திரி ஒன்பது படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.ஒன்பது நாட்களும், சுயம்பு மாரியம்மன் சுவாமி, திருவேற்காடு கருமாரியம்மன், ஹோரநாடு அன்னபூரணி அம்மன், தஞ்சை வராகி அம்மன், தெசவிளக்கு படவெட்டி அம்மன், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், கொல்லுார் மூகாம்பிகை அம்மன், பிரம்மசாரணி சரஸ்வதி அம்மன் ஆகிய அலங்ககாரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மேலும், சரஸ்வதி பூஜை அன்று நவராத்திரி சிறப்பு ஹோமம் நடக்கிறது. இந்தாண்டு கொலுவில், சமயபுரம் மாரியம்மன் சிலை புதிதாக வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி பாடல்கள் பாடுதல், பரதநாட்டியம், பஜனைகள், சிறுவர் புராண நாடகங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.
04-Oct-2024