உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல்: வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல்: வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் ஏற்பட்டதால், வேளாண் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய, நாற்றங்கால் விட்டுள்ளனர். இந்த நாற்றுகள் உரிய அளவில் வளர்ந்து, நாற்று நட தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில், நாற்றுகளில் சிவப்பு நிறம் படர்ந்து, புதிய நோய் பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். பயிர்கள் நட தயாரான நிலையில், இதுபோல் நாற்றுகள் புதிய நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால், செய்வதறியாது உள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், பயிர் நடவு பணிகள் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கவலையை போக்கவும், பயிர்கள் நடவு செய்யவும் உரிய நடவடிக்கையை வேளாண்மை துறை அதிகாரிகள் உடனே எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். அதன்படி உதவி வேளாண்மைத்துறை இயக்குனர் மாயஜோதி, துணை வேளாண்மை அலுவலர் நிஷா, வேளாண்மை உதவி இயக்குனர் சத்திய பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.உதவி வேளாண்மைத்துறை இயக்குனர் மாயஜோதி கூறுகையில், ''இது நாற்றங்காலில் ஏற்படும் சாதாரண நோய் தான். இதற்கு உரிய மருந்து தெளிக்க அறிவுறுத்தியுள்ளோம். உரிய நேரத்தில் இந்த நாற்றங்கால்களை பிடுங்கி நடவு செய்யலாம். இதனால் பயிர் நடவு பணியில் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை