மேலும் செய்திகள்
ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
22-Sep-2025
சேந்தமங்கலம்;தொடர் மழை எதிரொலியால், கொல்லிமலையில் புதிதாக உருவாகிய சிற்றருவியில், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.சேந்தமங்கலம் அடுத்துள்ள மலைவாசஸ்தலமான கொல்லிமலை, சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த சுற்றுலா தலத்திற்கு, தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சில நாட்களாக கொல்லிமலை முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே புதிதாக சிற்றருவிகள் உருவாகி உள்ளன.கொல்லிமலையில் உள்ள சேலுார் நாடு பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே தாழ்வான பகுதியில் மழைநீர் சிற்றருவியாக உருவாகி ஓடுகிறது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று குளித்து மகிழ்ந்தனர்.
22-Sep-2025