உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

நாமக்கல்: ''அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களின் பாது-காப்பை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அனைத்து துறை அலுவ-லர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறு-பான்மையினர் நலத்துறை ஆணையருமான ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ-டிக்கையாக, மணல் மூட்டை, பொக்லைன் இயந்திரம், ஜென-ரேட்டர், மீட்பு படகுகள், அவசர சிகிச்சை வாகனங்கள், ஆக்-சிஜன் உருளைகள் உள்ளிட்ட உபகரணங்கள், இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த காலங்களில் பெய்த மழை அடிப்படையில், அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, இரண்டு; மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, 30; குறை-வாக பாதிப்பிற்குள்ளாகும் இடம், ஒன்று என மொத்தம், 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்-களும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., சாந்தி, அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி