தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 'ஆட்சிமொழி சட்ட வார விழா' விழிப்புணர்வு பேரணி நடந்தது.தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரமாக கொண்-டாட தமிழகரசு உத்தரவிட்டுள்ளது. இதில், நாமக்கல் மாவட்-டத்தின் அரசு பணியாளர்களுக்கு கணினி தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், சட்டம், வரலாறு, அரசாணை, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க வலியுறுத்தி, வணிக நிறுவன உரிமையாளர்-களுடன் கலந்தாய்வு கூட்டம், கல்லுாரி மாணவர்களுடன் பட்டி-மன்றம், தமிழறிஞர்களிடையே ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம் ஆகியவை நடக்க உள்ளது. நேற்று, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். கலெக்டர் துர்காமூர்த்தி, ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள், தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.