உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விதிமீறும் சாய ஆலைகள் தயக்கம் காட்டும் அதிகாரிகள்

விதிமீறும் சாய ஆலைகள் தயக்கம் காட்டும் அதிகாரிகள்

விதிமீறும் சாய ஆலைகள்தயக்கம் காட்டும் அதிகாரிகள்பள்ளிப்பாளையம், நவ. 23-பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் அடுத்த ஓடக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் சாயக்கழிவுநீர் புகுந்ததால், 10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட இ.ஆர்., தியேட்டர் பகுதி, ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை ஆகிய பகுதியில் சாயக்கழிவு நீரால், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வருகிறது.சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக சாயக்கழிவுநீர் வெளியேற்றி வருவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கடந்த, 4 நாட்களுக்கு முன்பே குமாரபாளையம் மாசு காட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சாய ஆலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அதிகாரிகளால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை