உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலிஎலச்சிபாளையம், அக். 10-எலச்சிபாளையம் அடுத்த செக்காரப்பட்டி பஸ் ஸ்டாப்பில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !