உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஓணம் விழா கொண்டாட்டம்

பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஓணம் விழா கொண்டாட்டம்

நாமக்கல், நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர் ஏற்பாடு செய்திருந்தனர். கேரள மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். செண்டைமேளம் இசைத்து, நடனமாடி விழாவை சிறப்பித்தனர். பி.ஜி.பி., கல்வி நிறுவன தாளாளர் கணபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.பி.ஜி.பி., கல்வி நிறுவன முதன்மையர் பெரியசாமி, ஒற்றுமை, சகோதரத்துவத்தை மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.மேலும், பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, பார்மசி கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளின் முதல்வர்கள் மாணவர்களை ஊக்குவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை