உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது டிராக்டர்மோதி ஒருவர் பலிஎருமப்பட்டி, டிச. 10-எருமப்பட்டி யூனியன், பவித்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ், 54. இவர், நேற்று முன்தினம் மாலை, டூவீலரில் நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தார். பொட்டிரெட்டிப்பட்டி வாரச்சந்தை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டர், ராமராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை