மேலும் செய்திகள்
இளைஞர் எழுச்சி நாள் விழா
19-Oct-2024
குமாரபாளையம், அக். 27-குமாரபாளையம் பகுதியில் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு முகாம், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்றார்.அவர் பேசுகையில், ''இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உங்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. உங்கள் ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டால் சொல்ல வேண்டாம்; உஷாராக இருக்க வேண்டும்,'' என்றார்.பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன், சரவணாதேவி, ரமேஷ்குமார், எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ., குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன், பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Oct-2024