உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு

உழவர் சந்தையில் வடிகால் அமைக்க உத்தரவு நாமக்கல், நவ. 5-நாமக்கல் கோட்டை சாலையில், மாவட்ட மைய நுாலகம், உழவர் சந்தை அமைந்துள்ளது. உழவர் சந்தை பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால், மழைநீர், கழிவுநீர் உள்ளே புகுந்து தேங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., ராமலிங்கம், வேளாண் விற்பனை துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன், மைய நுாலகம், உழவர் சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உழவர் சந்தையில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை உள்ளே புகாமல், கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல, வடிகால் வசதி அமைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மாநகராட்சி மேயர் கலாநிதி, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் நாசர், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், தெற்கு நகர தி.மு.க., செயலாளர் ராணா ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ