திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவு
ப.வேலுார்: 'பெஞ்சல்' புயல் காரணமாக, சேலம், ஏற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 6,000 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. அதனால், கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளின் மழையளவு, தற்போதைய நீர்வரத்து உள்ளிட்ட விபரங்களை, நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். முன்னதாக, நாமக்கல் ஒன்றியம், வள்ளிபுரம் பஞ்., அண்ணா நகரில், கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பாக அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், தாசில்தார்கள் சீனிவாசன், முத்துக்குமார், பி.டி.ஓ.,க்கள் அசோகன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், தாசில்தார்கள் சீனிவாசன், முத்து க்குமார், பி.டி.ஓ.,க்கள் அசோகன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.