உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெளிமாவட்ட இடமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்தில் 3 ஹெச்.எம்.,க்கு உத்தரவு

வெளிமாவட்ட இடமாறுதல் கலந்தாய்வு மாவட்டத்தில் 3 ஹெச்.எம்.,க்கு உத்தரவு

நாமக்கல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். அதில், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், திருவண்ணாமலை மாவட்டம், கேழூருக்கும், அரியலுார் மாவட்டத்தில் இருந்து அப்துல்வாஹப், மாணிக்கம்பாளையத்திற்கும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, அரூர்தாஸ், வெப்படைக்கும் இடமாறுதல் பெற்றனர்.அதேபோல், களியனுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துராமலிங்கம், ஈரோடு மாவட்டத்திற்கும், குமாரபாளையம் புத்தர்தெரு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன், சேலம் மாவட்டத்திற்கும் பணி மாறுதல் பெற்றனர். வெளிமாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்ற தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அதற்கான உத்தரவு வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை