உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது

மளிகை கடையில் குட்கா விற்ற உரிமையாளர் கைது

ப.வேலுார், நவ. 23--நாமக்கல், நல்லுார், கந்தம்பாளையம் பகுதிகளில் குட்கா விற்பனை அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நல்லுார் போலீசார், நேற்று அப்பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கந்தம்பாளையம் கிழக்கு தெருவில் உள்ள மளிகை கடையில், 9 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ஜெயபாலன், 47, என்பவரை கைது செய்து, நல்லுார் கந்தம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை