ப.வேலுாரில் விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை
ப.வேலுார்,ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில், 500 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு வைகாசி 1ஐ முன்னிட்டு விஷ்ணுபதி புண்ணிய கால விழா நேற்று காலை 5:00 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்வி நடந்தது. பின் கோ பூஜை நடந்தது. 21 திரவியங்களால் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.