உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடியிருப்பு பகுதியில் மந்திரீக பூஜையால் பீதி

குடியிருப்பு பகுதியில் மந்திரீக பூஜையால் பீதி

பள்ளிப்பாளைம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த ராமகிருஷ்ணா நகர் குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அமாவாசை நாளில், இப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர், கோலம் வரைந்து அதில் மனித வரைபடம் வரைந்து பூஜை செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:ராமகிருஷ்ணா நகர் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, மர்ம நபர்கள் மூவர், கோலம் வரைந்து அதில் மனித உருவமிட்டு விளக்கு வைத்து மந்தீரிக பூஜை செய்து கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் வெளியே வந்துள்ளார். இவரை பார்த்ததும், மந்திரீக பூஜை செய்து கொண்டிருந்த, மூன்று பேரும் தப்பி ஓடினர். இதையறிந்த குடியிருப்பு மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானோம். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எதற்காக இந்த பூஜை நடத்தினர் என்பது தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி