உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகனம் மோதியதில் நடந்து சென்றவர் பலி

வாகனம் மோதியதில் நடந்து சென்றவர் பலி

பள்ளிப்பாளையம், சேலத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 80; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் ஆண்டிக்காடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மாணிக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மாணிக்கம் இறந்துவிட்டார். வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை