மேலும் செய்திகள்
ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
ராசிபுரம் ராசிபுரத்தில், ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தேவசகாயம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் குப்புசாமி சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டு என்பன உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 hour(s) ago