மேலும் செய்திகள்
மேல்நிலைத்தொட்டி பணியில் சுணக்கம்
20-Nov-2024
ராசிபுரம், டிச. 2-ராசிபுரம் அடுத்த காக்காவேரி கிராமத்தில், 15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி புதிய காலனி மக்கள் அவதிப்படுகின்றனர். ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய காலனி பகுதியில், மக்கள் வீடு கட்டத்தொடங்கினர். தற்போது, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி மக்களுக்கு, 15 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. அருகில் உள்ள பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து கொள்கின்றனர். குடிப்பதற்கு நீண்ட துாரம் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இப்பகுதிக்கு வந்த, பா.ஜ., நிர்வாகிகளிடம் பெண்கள் சரமாரியாக புகார் அளித்தனர். ஜல் ஜீவன் திட்டத்தில் கூட தண்ணீர் வழங்காததால் அதிருப்தி அடைந்த, பா.ஜ., நிர்வாகிகள் இது குறித்து பி.டி.ஓ., - கலெக்டர் ஆகியோருக்கு உடனடியாக ஆன்லைனில் புகார் அனுப்பினர்.
20-Nov-2024