உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு யூனியன் ஆபீசை முற்றுகையிட்ட சமயசங்கிலி மக்கள்

பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு யூனியன் ஆபீசை முற்றுகையிட்ட சமயசங்கிலி மக்கள்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் சமயசங்கிலி பஞ்.,யை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்-டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி தரம் உயர்த்த, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, பள்ளிப்-பாளையம் அக்ரஹாரம், புதுப்பாளையம், சமய-சங்கிலி, களியனுார், ஓடப்பள்ளி ஆகிய பஞ்சா-யத்து பகுதிகளை இணைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமயசங்கிலி பஞ்., தலைவர் முருகேசன் தலைமையில், 100க்கு மேற்பட்ட மக்கள், பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகம் முன் திரண்டனர்.ஆனால், நேற்று அரசு விடுமுறை என்பதால், அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால், அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர். தகவலறிந்து வந்த, கிராம பஞ்., பி.டி.ஓ., கிரிஜா, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து மக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து, சமயசங்கிலியை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறியதாவது:சமயசங்கிலி பஞ்சாயத்து விவசாயம் நிறைந்த பகுதியாகும். நாங்கள் விவசாயத்தை சார்ந்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் பகு-தியை நகராட்சியுடன் இணைக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆற்று பாசனம், கிணற்று பாசனம், வாய்க்கால் பாசனம் ஆகியவற்றை பயன்படுத்தி, முப்போகம் விவசாயம் செய்து வருகிறோம். விவசாயத்தை காப்பாற்ற, நகராட்-சியுடன் இணைக்ககூடாது. இது தான் எங்கள் பஞ்., மக்களின் கோரிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை