உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

சாலையோரம் குப்பை எரிப்பு மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

சாலையோரம் குப்பை எரிப்புமூச்சுத்திணறலால் மக்கள் அவதிவெண்ணந்துார், டிச. 10-வெண்ணந்துார் அருகே, அளவாய்ப்பட்டி பஞ்சாயத்து பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வெண்ணந்துார் - ஓ.சவுதாபுரம் செல்லும் சாலை மற்றும் நரிக்கல் கரடு செல்லும் இணைப்பு சாலையோரத்தில், இப்பகுதி மக்கள் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள், முதியோர் சுவாசிக்க சிரமப்படுகின்றனர். எனவே, பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகத்தினர் சாலையோரத்தில் தேங்கும் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை