மேலும் செய்திகள்
திறந்தவெளி கிணறு: அதிகரிக்க நடவடிக்கை
29-Oct-2024
கிணற்றை துார்வாரி குடிநீர்வழங்க மக்கள் கோரிக்கைநாமக்கல், நவ. 12-நடுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டி பஞ்., நடுப்பட்டியில், 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில், இரண்டு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவை இரண்டிலும் போதியளவு தண்ணீர் வரவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. அதனால், எங்கள் கிராமத்தில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை துார்வாரி, மின் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Oct-2024