மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19 பேருக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்19 பேருக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்டம்நாமக்கல், டிச. 10-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 535 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில், 4 பேருக்கு, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடனுதவி, சமூக பாதுகாப்பு திட்டத்தில், 8 பேருக்கு, தலா, 20,000 ரூபாய் வீதம் திருமண உதவித்தொகை, 2 பேருக்கு, தலா, 55,000 ரூபாய் வீதம் இயற்கை மரண உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு, காதொலி கருவி, ஆர்பிட் ரீடர் என, மொத்தம், 19 பேருக்கு, 9.01 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.முன்னதாக, பீஹார் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில், இளையோர் பிரிவில், மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சந்தோஷிற்கு, கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.