உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர் கூட்டம் 398 மனுக்கள் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டம் 398 மனுக்கள் வழங்கல்

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 398 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். தொடர்ந்து, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர், பணியின்போது அடிப்பட்டு இறந்தமைக்கு, அவரது வாரிசுதாரருக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தொழிலாளர் உதவி ஆணையாளர் இந்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ