உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு

வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு

நாமக்கல், சொந்த வீடோ, நிலமோ இல்லாத குறவன் சமுதாயம் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டரிடம் முத்துக்காப்பட்டி மக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கங்கலம் தாலுகா, முத்துக்காப்பட்டி, பெருமாபாளையம், குறவன்காலனி உள்ளிட்ட பகுதியில், குறவன், அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர், மழைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் என, 300 குடும்பங்களை சேர்ந்த எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ