உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி கேட்டு மனு

சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி கேட்டு மனு

நாமக்கல்: 'சாக்கடை கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் நாகராஜபுரம் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் நாகராஜபுரம் அடுக்குமாடி குடியிருப்பில், 240 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள கழிவுநீர், ஏ.பிளாக்கிற்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது, அப்பகுதியை சேர்ந்த விவசாய தோட்டத்தினர், கழிவுநீர் செல்ல பாதை இல்லை என கூறி, மணல் அணை போட்டு தடுத்து வைத்துள்ளனர். இதனால், தண்ணீர் பல மாதங்களாக தேங்கிய நிலையில் உள்ளது. குடிசை மாற்று வாரியத்திடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாக்கடை வெளியேற கால்வாய் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை