நிறுத்தப்பட்ட டவுன் பஸ் மீண்டும் இயக்கக்கோரி மனு
நாமக்கல்: மக்கள் குறைதீர் கூட்டத்தில், தும்மங்குறிச்சி பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், நாமக்கல் நகர டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து கருப்பட்டிபாளையம், பெரியூர், தும்மங்குறிச்சி, தண்டமங்கலம், நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டன்பாளையம், சுங்ககாரம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கின்போது, அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் அந்த டவுன் பஸ் இயக்கப்படவில்லை. அதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.