உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு

பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் படையெடுப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலம் வழியாக ஏராளமான பக்தர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பாளையம் வழியாக பழனிக்கு நடை பயணமாக பாதயாத்திரை சென்று வருகின்றனர். இவர்கள், கடந்த, 3 நாட்களாக, பள்ளிப்பாளையம் காவிரிப்பாலம் வழியாக செல்கின்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் பக்தர்கள், 3 அல்லது 4வது நாளில் பழனி மலைக்கு சென்றடைவர். பாதயாத்திரை பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், கரும்பு, பிஸ்கட், டீ போன்றவை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை