உள்ளூர் செய்திகள்

1,000 பனை விதை நடவு

நாமக்கல்: நாமக்கல்லில், காமராஜர் நற்பணி அறக்கட்டளை சார்பில், 1,000 பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது. நாமக்கல் எஸ்.பி.கே., நகர் வாரி கருப்பனார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, காமராஜர் நற்பணி அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயூரப்பன் ஆகியோர், பனை விதைகள் நடவு செய்து துவக்கி வைத்தனர். நாடார் சங்க கொங்கு மண்டல தலைவர் பழ-னிசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சின்னதுரை, பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்று, 1,000 பனை விதைகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை