உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்

பொக்லைன் உரிமையாளர் 2வது நாளாக போராட்டம்

பள்ளிப்பாளையம்:வரி, இன்சூரன்ஸ் தொகையை குறைக்கக்கோரி, பள்ளிப்பாளையத்தில் பொக்லைன் உரிமையாளர்கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளிப்பாளையம் வட்டாரத்தில், 50 பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், தெற்குபாளையம் பகுதியில் தங்களது பொக்லைன் இயந்திரங்களை வரிசையாக நிறுத்தி வைத்து, இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:வரி, இன்சூரன்ஸ் தொகையை குறைக்க வேண்டும்; பொக்லைன் உதரி பாகங்கள் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மினிமம், இரண்டு மணி நேரத்திற்கு, 3,000 ரூபாய், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, 1,300 ரூபாய் வாடகை என, முடிவு செய்துள்ளோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி