மேலும் செய்திகள்
தி.மு.க., பேனர் கிழிப்பு
28-Sep-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, அய்யம்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம், மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், கணவர் முத்துசாமி இறந்து விட்டதாகவும், இவருக்கு ஈரோட்டில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இறந்தவர் பெயர் வனஜா, 70, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இருப்பிடம் இல்லாததால், காலி இடங்களில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதுபோல் முதல்நாள் இரவு துாங்கியவர், காலையில் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., முருகன் குமாரபாளையம் போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28-Sep-2025