உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மல்லசமுத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பொருட்கள் சூறை மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

மல்லசமுத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பொருட்கள் சூறை மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

மல்லசமுத்திரம்,: மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள், டேபிள், சேர், மின் விசிறி உள்ளிட்ட பொருட்-களை உடைத்தும், மாணவியரின் புத்தகங்களை கிழித்தும் சூறை-யாடி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தின் மையப் பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 30ல், (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் பள்ளி முடிந்து, வகுப்பறையை பூட்டிவிட்டு சென்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, நேற்று காலை, மாணவியர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.அப்போது, தரைத்தளத்தில் இருந்த, 5 வகுப்பறை, முதல் தளத்தில், 2 வகுப்பறை என, மொத்தம், 7 வகுப்பறைகளில், மாணவியர் வைத்திருந்த புத்தகங்களை கிழித்து வீசி எறிந்துள்-ளனர். மேலும், டேபிள், சேர், 7 மின்விசிறி, 14 டியூப் லைட் என, அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி சூறை-யாடி உள்ளனர். அதுமட்டுமின்றி, வகுப்பறைக்கு வெளியே, 'குடி'மகன்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள், சிகரெட் பாக்-கெட்டுகள் உள்ளிட்டவையும் கிடந்தன. இதைப்பார்த்த மாண-வியர், ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இதுகுறித்து புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், கைரேகை நிபு-ணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இப்பள்-ளியில், இரவு காவலர் இல்லாததால், இச்செயல் நடந்துள்ளது. அதனால், நிரந்தரமாக இரவு காவலரை நியமித்து, பள்ளி வளாகத்-திற்குள்ளேயும், பள்ளியை சுற்றியும், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். சுற்றுச்சுவரை உயர்த்தி, கண்ணாடி துகள்களை அதில் பதிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி