உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆண் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

ஆண் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அடுத்த மரூர்பட்டி ஏரிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில், 44 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து, மரூர்பட்டி வி.ஏ.ஓ., முருகேசன், நாமக்கல் போலீசில் புகாரளித்தார். போலீசார், சடலத்தை கைப்பற்றி விசா-ரணை நடத்தினர். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. சடலத்தை மீட்டு, பிரோத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் சிலு-வம்பட்டியை சேர்ந்த பெயின்டர் செந்தில்குமார், 44 என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் போலீசார் தொடர்ந்து விசா-ரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை