மனைவியின் கழுத்தை அறுக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை
நாமக்கல், நாமக்கல் அருகே, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்ற கணவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்நாமக்கல் அடுத்த புலவர்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 48, லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி, 40. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமதி நடுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபடி வேலைக்கு சென்று வருகிறார். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு நடுப்பட்டிக்கு வந்த ரவி, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, கழுத்தில் கத்தியை வைத்து அறுக்க முயன்றுள்ளார். இதில் லேசான காயம் அடைந்த சுமதி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அப்போது ரவி அங்கிருந்து தப்பினார். காயமடைந்த சுமதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.