உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூஜை

பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூஜை

வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், குட்டலாடம்பட்டி, தொட்டியவலசு, நெ.3.கொமாரபாளையம், அனந்தகவுண்டம்பாளையம், மின்னக்கல், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சௌதாபுரம், தொட்டியபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டபட்டி உள்ளிட்ட பகுதிகளில், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அக்கரைப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் புதிய நுாலகம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் மதிவண்ணன் அடிக்கல் நாட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய ஆத்மா குழு தலைவர் துரைசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !