மறைந்த எம்.எல்.ஏ., உருவப்படம் திறப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறைந்த பொன்னுசாமி எம்.எல்.ஏ., உருவப்பட திறப்பு விழா, நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள செம்மேடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரம-ணியம், எம்.எல்.ஏ., பொன்னுசாமி உருவப்படத்தை திறந்து வைத்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி உள்பட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.