உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

நாமக்கல், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்திருநாள், வரும் டிச., 3ல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது வீடு, வர்த்தக நிறுவனங்கள், கோவில்களில் தீபமேற்றி சுவாமியை வழிபடுவர். இதற்காக, களிமண்ணாலான அகல் விளக்கை பிரதானமாக பயன்படுத்துவர். அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, நாமக்கல்-துறையூர் சாலை, அலங்காநத்தம் பிரிவு அடுத்த போடிநாயக்கன்பட்டியில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கும் விளக்குகள், நாமக்கல், சேலம், கரூர், தர்மபுரி, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இதுகுறித்து, அகல் விளக்கு தயாரிக்கும் பழனியம்மாள், 70, கூறியதாவது:இங்கு, இரண்டு குடும்பங்களை சேர்ந்த நாங்கள், பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சீசனுக்கேற்ப, பொங்கல் பானை, அடுப்பு, சிட்டி விளக்கு உள்ளிட்டவை தயாரிக்கிறோம். இதற்காக, புதுச்சத்திரம், ஏளூர், அகரம் ஏரி பகுதி மற்றும் கரியபெருமாள் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து களிமண் கொண்டுவரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 2,000 முதல், 3,000 விளக்குகள் தயாரிப்போம். மூன்று வடிவத்தில் தயாரிக்கப்படும் விளக்குகள், 1,000 விளக்குகள், 1,000 ரூபாய் முதல், 1,250 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். கை விளக்கில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐதீகத்தால், தற்போது விற்பனை சூடுபடித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி