சாம்பல் பூசணி விலை உயர்வு
ப.வேலுார், பரமத்தி வேலுார் தாலுகாவில், சாம்பார் பூசணி எனப்படும் சாம்பல் பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்னர். இங்கு விளையும் பூசணியை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில வியாபாரிகள், வயல்களில் நேரடியாக வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த மாதம் விளைச்சல் அதிகரித்ததால், ஒரு கிலோ சாம்பல் பூசணி, இரண்டு ரூபாய்க்கு விற்பனையானது.தற்போது, விலை உயர்ந்து சாம்பல் பூசணி, நான்கு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை, விவசாய தோட்டத்திலேயே வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர். அதனால், தற்போது சாம்பல் பூசணி விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.