உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி, மாநில கல்வி கொள்கையை நிறைவேற்றுவதற்கு முயற்சி நடந்திருப்பதை வரவேற்பது. இருமொழிக்கொள்கை மற்றும் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததை பாராட்டுவது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கும், 'எமிஸ்' ஆபரேட்டர்ஸ் பணியமர்த்தப்பட வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் கணினி ஆய்வகம் மற்றும் திறன்பலகை வகுப்பறைகள் அமைத்துதர வேண்டும். காலை உணவு திட்டத்தில், ஐம்பது கிராம் அளவிற்கு வழங்கப்படும் சேமியா மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. 150 கிராமுக்கு அதிகமான அளவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை