ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நடந்தது. அதில், 2024-25ம் கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்; நீட், ஜே.இ.இ., பயிற்சிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்; தனித்திறன் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.கல்வி நிறுவன தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., சங்கீதா, நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். கல்வி நிறுவன இயக்குனர்கள் டாக்டர் அருள், பொறியாளர் சேகர், சம்பூர்ணம், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.