உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதிபேராசிரியர் பலி

டூவீலர்கள் மோதிபேராசிரியர் பலி

பள்ளிப்பாளையம், டிச. 18-திருச்செங்கோட்டை சேர்ந்தவர் நடராஜன், 53; ஈரோட்டில் உள்ள தனியார் மருந்தியல் கல்லுாரியில் பேராசிரியர். நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டில் இருந்து திருச்செங்கோட்டிற்கு டூவீலரில், கொக்கராயன்பேட்டை சாலையில் பில்லிக்கல்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஏதிரே, சென்னிமலையை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் இருவரையும் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், நடராஜன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !